- அப்ராஹ்மண பெண்ணை ப்ராஹ்மணன் மணக்கலாமா?
- சமாவர்த்தனங்கள் பண்ணிக்கொண்டு - ப்ரஹ்மசர்யத்தை விடுத்து - கன்னிகாதானம் பெற்றுக் கொள்ளும் ப்ராஹ்மணன் - காமத்தை அல்லது பெண்ணின் வெளித்தோற்றத்தை கண்டு மயங்கினால் அது கந்தர்வ விவாஹம் எனப்படும். முதல் மனைவி ப்ராஹ்மண வதுவாக இருத்தல் மிகவும் ஸ்ரேஷ்டம்.
- அப்ராஹ்மண ஆணை ப்ராஹ்மணகன்னிகை மணக்கலாமா?
- ப்ராஹ்மண விவாஹ சமயத்தில் கன்னிகைக்கு பலவிதமான - சமஸ்காரங்கள் செய்விப்பார்கள் - அதாவது நுகத்தடி வைத்தல், மௌஞ்சி பந்தனம் .. - எனவே ப்ராஹ்மண கன்னிகை சமஸ்காரங்களை பெறுவது விவாஹ சமயத்தில் தான். அப்ராஹ்மண விவாஹத்தால் வர்ணம் ஒழிந்து கணவனின் வர்ணத்தை பெண் தழுவுவாள்!
- தாலி கட்டியவுடன் முத்தம் கொடுத்தால் தப்பா?
- பாணி கிரஹணம், கன்னிகா தானம், ஸப்தபதி, லாஜ ஹோமம் , என்று மொத்தம் ஐந்து நாட்கள் விவாஹ சமஸ்காரம் நடை பெரும். அந்த சமயத்தில் வது வரர்கள் தீக்ஷை வஸ்திரம் அணிந்து தினமும் பாலிகையை பூஜை செய்து, இருகாலத்திலும் ஒபாசனம் செய்தல் உத்தமம். அதே போல காரம், உப்பு, புளிப்பு இவைகளை தவிர்த்து, ஸ்நானம், போன்றவற்றயும் தவிர்த்தல் வேண்டும். விவாஹம் என்பது அக்னிகார்யங்கள் செய்ய ஒருவனை யோக்கியனாக செய்யும் சமஸ்காரம். கர்பாதான சமயத்துல சம்ஹிதா பாகத்தில் உள்ள 2 .5 விஷயத்தை - இந்திரன் த்வஷ்டா என்னும் மூன்று தலை கொண்ட அசுரனை வதம் பண்ணின விஷயங்களை சொல்லி வைத்து ருது காலத்தில் - பெண்ணானவள் - ஸ்நானம் செய்தல், நகத்தால் கைகளை கோருதல், பேசுதல் இவைகளை தவிர்த்து - தன்னம் தனியே இருப்பதே ஒரு விரதமாகும். அதனை செய்தால் சந்தான பாக்கியம் உண்டாகும் என்றும் வரத்தை நினைவு படுத்தி, பிறகு - அஷ்டமி, நவமி, ஏகாதசி, த்வாதசி, திரயோதசி, அமாவாஸ்யை, பௌர்ணமி,ப்ரதமைச்சதுர்தசீ - அல்லாத தினங்களில் மட்டுமே கலவி பண்ண வேண்டும் என்ற தர்ம சாஸ்திர விஷயத்தை சொல்லி கொடுத்து - பிறகு ஏகாந்தத்தில் இருப்பது உத்தமம்!
Philosophy
Religion, Culture,Scriptures and Self Inquiry
Wednesday, December 22, 2021
Apasthambha Grihya Sutras - Part- I
Subscribe to:
Posts (Atom)