Wednesday, December 22, 2021

Apasthambha Grihya Sutras - Part- I

  1. அப்ராஹ்மண பெண்ணை ப்ராஹ்மணன் மணக்கலாமா?
    1. சமாவர்த்தனங்கள் பண்ணிக்கொண்டு - ப்ரஹ்மசர்யத்தை விடுத்து - கன்னிகாதானம் பெற்றுக் கொள்ளும் ப்ராஹ்மணன் - காமத்தை அல்லது பெண்ணின் வெளித்தோற்றத்தை கண்டு மயங்கினால் அது கந்தர்வ விவாஹம் எனப்படும். முதல் மனைவி ப்ராஹ்மண வதுவாக இருத்தல் மிகவும் ஸ்ரேஷ்டம்.
  2. அப்ராஹ்மண ஆணை ப்ராஹ்மணகன்னிகை மணக்கலாமா?
    1. ப்ராஹ்மண விவாஹ சமயத்தில் கன்னிகைக்கு பலவிதமான - சமஸ்காரங்கள் செய்விப்பார்கள் - அதாவது நுகத்தடி வைத்தல், மௌஞ்சி பந்தனம் .. - எனவே ப்ராஹ்மண கன்னிகை சமஸ்காரங்களை பெறுவது விவாஹ சமயத்தில் தான். அப்ராஹ்மண விவாஹத்தால் வர்ணம் ஒழிந்து கணவனின் வர்ணத்தை பெண் தழுவுவாள்!
  3. தாலி கட்டியவுடன் முத்தம் கொடுத்தால் தப்பா?
    1. பாணி கிரஹணம், கன்னிகா தானம், ஸப்தபதி, லாஜ ஹோமம் , என்று மொத்தம் ஐந்து நாட்கள் விவாஹ சமஸ்காரம் நடை பெரும். அந்த சமயத்தில் வது வரர்கள் தீக்ஷை வஸ்திரம் அணிந்து தினமும் பாலிகையை பூஜை செய்து, இருகாலத்திலும் ஒபாசனம் செய்தல் உத்தமம். அதே போல காரம், உப்பு, புளிப்பு இவைகளை தவிர்த்து, ஸ்நானம், போன்றவற்றயும் தவிர்த்தல் வேண்டும். விவாஹம் என்பது அக்னிகார்யங்கள் செய்ய ஒருவனை யோக்கியனாக செய்யும் சமஸ்காரம். கர்பாதான சமயத்துல சம்ஹிதா பாகத்தில் உள்ள 2 .5 விஷயத்தை - இந்திரன் த்வஷ்டா என்னும் மூன்று தலை கொண்ட அசுரனை வதம் பண்ணின விஷயங்களை சொல்லி வைத்து ருது காலத்தில் - பெண்ணானவள் - ஸ்நானம் செய்தல், நகத்தால் கைகளை கோருதல், பேசுதல் இவைகளை தவிர்த்து - தன்னம் தனியே இருப்பதே ஒரு விரதமாகும். அதனை செய்தால் சந்தான பாக்கியம் உண்டாகும் என்றும் வரத்தை நினைவு படுத்தி, பிறகு - அஷ்டமி, நவமி, ஏகாதசி, த்வாதசி, திரயோதசி, அமாவாஸ்யை, பௌர்ணமி,ப்ரதமைச்சதுர்தசீ - அல்லாத தினங்களில் மட்டுமே கலவி பண்ண வேண்டும் என்ற தர்ம சாஸ்திர விஷயத்தை சொல்லி கொடுத்து - பிறகு ஏகாந்தத்தில் இருப்பது உத்தமம்!

Apasthambha Grihya Sutras - PArt - II

 சாஸ்திரத்தில் பெண்களுக்கு மறுமணம் உண்டா ?

இல்லை. கணவனும் பத்னியும்  ஈருடல் ஓருயிர் என்னும் படியால் - கணவன் காலத்திற்கு அனந்தரம்   மனைவி கைம்மை நோன்பு பூண்டு பின்பு பதி லோகத்தில் கணவனுடன் சேர்ந்து இன்புறுவாள். அதே விதவை அபுத்ரவதியாக இருந்தால் - கணவனின் அண்ணன் தம்பியர் அவளுக்கு சந்தானார்தம் கர்பாதானம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது சாஸ்திரம். 

சாஸ்திரத்தில் ஆணுக்கு மறுமணம் உண்டா ?

தன்னுடைய வம்சோதாரகனாய் புத்ரனை தர முடியாவிட்டாலோ, மனைவி - சொன்ன பேச்சு கேளாமல் இருந்தாலோ - ஆணுக்கு மறுமணம் செய்யும் உரிமை உண்டு. அதே போல மனைவி மரணித்தால் - அக்னி கார்யங்கள் வேள்விகள் செய்யும் பொருட்டு ஆண் இன்னொரு மணம் செய்யலாம் ( வேள்விகளை செய்யும் பக்ஷத்தில்).

கல்யாண செலவில்  பாதியை ஆண் வீட்டார் கொடுத்தால் தப்பா ?

வேதோக்தமாக - சமஸ்காரங்கள் பண்ணி கன்னிகா வரணம் செய்யும் ஸ்நாதகன் - எக்காரணத்தாலும் பணமோ, பொருளோ, பொன்னோ கொடுத்து விவாஹம் செய்தல் கூடாது - அப்படி செய்தால் அது பெண்ணை பணம் கொடுத்து வாங்குவதை போல ஆகி விடும் - அதனை ராக்ஷச விவாஹம் என்பார்கள். (மிலேச்சர்கள் பொன் கொடுத்து பெண் கட்டுவார்கள்.)

ஆண்கள் வரதக்ஷிணை வாங்கலாமா?

கூடவே கூடாது. நல்ல குடும்பத்தில் பிறந்த வதுவை - பெரியவர்களை அனுப்பித்து வரித்து - பிறகு தரும ப்ரஜார்த்தம் - அதாவது நல்ல பிள்ளைகளை பெறுதல் பொருட்டு - சாஸ்திரங்களை அனுசந்தானம் செய்து ஸ்வாத்யாய பரனாக இருத்தல் பொருட்டு மட்டுமே விவாஹம் - இதில் பணம், காசு, இலஞ்சம் .. இவற்றுக்கு இடமே இல்லை. கன்னிகையின் தந்தை தன் சக்திக்கேற்ப வதுவை பொன்னாலும், பூவிலும் அலங்கரித்து - வரனை தன் மகளை காக்க வந்த மஹாவிஷ்ணுவாக பாவித்து பெண்ணை கொடுத்தல் உத்தமம்.

ஜாதகம் பார்த்தல்,பெண்பார்த்தல் சொஜ்ஜி பஜ்ஜி - இவற்றின் முக்யத்வம் என்ன ?

ஆபஸ்தம்பர் சொல்லும் பொழுது -  மூன்று விதமான விதைகள், அக்னி  ஹோத்ர வேதியின் மண், விவசாய பூமியின் மண் , பசு மாட்டு சாணிமற்றும் மயானத்தின் மண்  - ஆகியவற்றை வைத்து ஏதேனும் ஒன்றை தொட சொல்ல வேண்டும் . மயானத்தின் மண்ணை தொட்டால் - விவாஹம் செய்தல் கூடாது. வேறு எதனை தொட்டாலும்  - விவாஹம் செய்யலாம் . எனவே வைதிக விவாஹத்தில் - சொஜ்ஜி, பஜ்ஜி, மாப்பிள்ளை அழைப்பு, வர தக்ஷிணை எல்லாமே நிஷித்தம் என்று புரிந்து கொள்ளுதல் வேண்டும்.