Monday, July 11, 2016

BajaGovindam

ஆதி சங்கரர் இயற்றிய கிரந்தங்களிலே மிஹவும் எளிமையானதும்  ப்ரசிட்தி பெற்றதும் இந்த பஜ கோவிந்தம் என்னும் கிரந்தம்(கவிதை / இலக்கியம்/ புஸ்தகம்). இப்பொழுது இந்தக் கிரந்தத்திலே உள்ள முத்துக்களை அனுபவிப்போம்.

நாரியஸ்தனபார  நாபியிடேஷம்  திருஷ்டிவா  மஹாமோஹாவேஷம்

नारीस्तनभर नाभीदेशं द्ऱुश्ट्वा मागामोहावेशम्

naariistanabhara naabhiideshaM dRushTvaa maagaamohaavesham

பெண்களின் மார்பகம் மற்றும் வயிற்றுப பகுதியைக் கண்டு மொஹாவேஷபி படாதே !

எத்தனமாம்ஸாவசாதி    விகாரம் மனசி   விசிந்தய  வாரம்  வாரம் !

एतन्मांसावसादि विकारं मनसि विचिन्तय वारं वारं

etanmaaMsaavasaadi vikaaraM manasi vichintaya vaaraM vaaraM

பெண்களின் அங்கங்கள் (ஸ்தனபாரம் மற்றும் நாபிப் பகுதி) வேறொன்றும் இல்லை - அது தசையின் வளர்ச்சியே என்பதை மீண்டும் மீண்டும்  மனதிலே யோசித்துக் கொள்.

யாவதிப்பவனோ  நிவசதி  தேஹே   டாவதிப்ரிச்ச்சதி  குசலம்  கேஹே

यावत्पवनो निवसति देहे तावत्प्ऱिच्छति कुशलं गेहे

உடம்பில் காற்று/பிராணன் உள்ள மட்டிலும் அனைவரும் நலம் விசாரிப்பார்கள்.

கதவாதி  வாயூ   தேஹாபாயே பார்யா  பிபியத்தி    தஸ்மின்காயே

गतवति वायौ देहापाये भार्या बिभ्यति तस्मिन्काये 

ஆனால், அதே பிராணன் உடம்பில் இருந்து கிளப்பி வெளியே போன பிறகு, சொந்தம் மனைவி மக்களும், சுற்றத்தாரும் பிணம் என்று பயந்து ஓடுவார்கள்.

காதே  காந்தா  கோஸ்தே  புத்திர  சம்சாரா .யமதிவ  விசித்திர  .
काते कान्ता कस्ते पुत्रः संसारोऽयमतीव विचित्रः ।

மனைவி யார்? மக்கள் யார்? இந்த சம்சார வாழ்க்கையே ஒரு விசித்திரமானது.  .
கசிய  த்வம்  கஹ்  குத்த  ஆயாதாஹ்  தத்த்வம்    சிந்தாயா  தடிஹ  பிராதஹ்.

कस्य त्वं कः कुत आयातः तत्त्वं चिन्तय तदिह भ्रातः ।

யார் நீ? எதற்காக இங்கே வந்தாய் என்பதை யோசித்துப் பார் சகோதரா !
அகில உலகத்திற்கும் வேதாந்த குருவாக விளங்கும் நம் சங்கர பகவாடப்பதற் , எளிமையின் சிகரமாகி சோதர அல்லது அண்ணா என்று சொல்கின்றார். எவ்வளவு அருமை என்று பாருங்கள்.

No comments: