Monday, July 11, 2016

Selected Verses from Soundarya lahari

சௌந்தர்ய லஹரி என்னும் கிரந்தம் ஆதி   சங்கரரால் தொகுத்து வழங்கப் பட்டது. இன்றைக்கு வயிற்றுப பிழைப்புக்கு வேண்டி என்ன என்னமோ   செய்கிறோம்  - ஆனால் இந்த அத்யாத்ம  கிரந்தத்தை இங்கு அனுபவிப்போம். இதன் மஹிமையை அளவிடவே முடியாது. அன்னையின் புகழை மிக அழகாக  இங்கு நமது ஆசிரியயர் கூறுகின்றார்.

ஶிவஃ ஶக்த்யா யுக்தோ யதி பவதி ஶக்தஃ ப்ரபவிதும்
ன சேதேவம் தேவோ ன கலு குஶலஃ ஸ்பன்திதுமபி|
அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர-விரின்சாதிபி ரபி
ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்யஃ ப்ரபவதி|| 1 ||

முதல் ஸ்லோகத்திலேயே இங்கு ஆதி சங்கரர், முற்பிறவிகளின் புண்ணியம் (பூர்வ சுக்ருதம்) இல்லாதவர்கள் அம்பாளைப் பூஜிக்க முடியாது என்று சொல்கின்றார். மனிதராகப் பிறப்பது மிகவும் அரிது, அதிலும் நல்ல குலத்திலே நம்முடைய பாரத தேசத்தில் பிறப்பது இன்னும் அரிது. அப்படிப் பிறந்து பக்தி, ஞானம், போன்ற அறிய பண்புகள் கொண்டு விளங்குவது இன்னும் அரிது. அப்படி இருந்தும், அம்பாளை பரதேவதையாகப்  பாவித்து வழிபட வேண்டும் என்றால், இன்னும் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

ப்ரஹ்ம ஸ்வரூபமாக  இருக்கும் அந்த சிவம் , மாயையின் வடிவாக இருக்கும் சக்தியின் சேர்க்கை இன்றி ஒரு காரியமும் செய்ய இயலாது. அவளுடைய சேர்க்கை இன்றி ஒரு துரும்பையும் கூட சிவனால் அசைக்க இயலாது. அவ்வளவு புகழ் வாய்ந்த அம்பிகையை ஹரி, ஹரன், பிரம்மா போன்றவர்கள் எல்லாம் வந்து வழிபட்டார்கள். அப்படி இருக்கையில், பூர்வ  ஜென்மங்களில் புண்ணியம் செய்யாதவர்கள் எப்படி அவளை வந்து வழிபட முடியும் ?
ஆச்சார்யர் இங்கே அம்பாள் உடைய பெருமைகளையும், அவளுடைய பக்தர்களின் பெருமையையும் மிக அழகாக்க  கூறுகின்றார்.

தனீயாம்ஸும் பாம்ஸும் தவ சரண பங்கேருஹ-பவம்
விரிம்சிஃ ஸம்சின்வன் விரசயதி லோகா-னவிகலம் |
வஹத்யேனம் ஶௌரிஃ கதமபி ஸஹஸ்ரேண ஶிரஸாம்
ஹரஃ ஸம்க்ஷுத்-யைனம் பஜதி பஸிதோத்தூள னவிதிம்|| 2 ||

முதல் ஸ்லோகத்தில் புண்ணியம் இல்லாதவர்களுக்கு அம்பாள்  உடைய பக்தி  வராது என்று சொல்லி ஆகி விட்டது. இப்பொழுது அவளுடைய திருப்பாத தூளியின் மஹிமையை இங்கு சொல்லுகின்றார் நம் ஆச்சாரியார்.  அம்பாளின் திருப்பாதங்க்ளின்   பொடி (தூளி) யை ப்ரம்மா எடுத்துத் , தன்னுடைய ஸ்ருஷ்டி காரியம் தடை இன்றி நடக்க , தன்னுடன் வைத்துக் கொண்டார். அதே போலே, ஆயிரம் தலை கொண்ட ஆதிசேடன், அதனை இந்த உலகங்களை எல்லாம் தாங்குவதற்காக, தான் தலையிலே இட்டுக் கொண்டான். ஹரன் என்ற ருத்ரனும் , அதனை திரு நீராக இட்டுக்கொண்டான். அவளுடைய பாத துளியின் மஹிமையை இங்கே பார்க்கின்றோம் - படைத்தல், காதல், அளித்தல் என்ற முத்தொழில்களை செய்வதற்கு அது ஹேதுவாக  உள்ளது.

No comments: